வி.சி.கவில இருந்து வந்துருக்கோம்.. ரூ.50 ஆயிரத்த எடுத்து வையி.. ரூ.2 ஆயிரம் வேணா தர்ரேன்..! கேட்டதை தரமாட்டியா..? அடித்து உதைத்த சம்பவம்
ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு சொந்தமான ரோலிங் ஷட்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் புகுந்து திருவிழா நடந்த 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டு உரிமையாளரின் மகனை கும்பலாக சேர்ந்து தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 9 பேரை கும்பகோணம் போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் புறவழிச் சாலையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பாலகிருஷ்ணன் என்பவர் ரோலிங் ஷட்டர் தயாரிக்கும் நிறுவனத்தை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார் .
அந்த நிறுவனத்தை பாலகிருஷ்ணன் மகன் சௌந்தர்யான், மருமகன் மோகன் ஆகியோர் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்துக்கு கடந்த 26ஆம் தேதி சென்ற சிலர் , தங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அமர்ந்து பேசி உள்ளனர்.
கோவில் திருவிழாவிற்கு நன்கொடை பணம் கொடுக்குமாறு கேட்டதாகவும், அங்கு இருந்த மோகன் 2000 ரூபாய் தருவதாக கூறிய நிலையில், 50,000 ரூபாய் வேண்டும் என கேட்டு வாக்குவாதம் செய்து அவரை சட்டையை பிடித்து தாக்கியதாகவும் கூறப்படுகின்றது
பணம் தர மறுத்த ஆத்திரத்தில் மோகனை சுற்றி வளைத்து கும்பலாக சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சாலைக்கு இழுத்துச்சென்றும் தாக்கிய நிலையில் மோகனுக்கு ஆதரவாக சிலர் அங்கு வந்ததால் தாக்குதல் நடத்திய வசூல் கும்பல் அங்கிருந்து சென்றது.
காயம் அடைந்த மோகன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் நிறுவனத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் தாலுக்கா காவல் நிலைய போலீசார் நிறுவனத்தில் பொருத்தப்பட்ட சிசிடி டிவி காட்சிகளை ஆய்வு செய்து கருப்பூரை சேர்ந்த கனகராஜ்,பூமிநாதன் உள்ளிட்ட ஒன்பது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில் ஏழு பேர் தலைமறைவான நிலையில் கனகராஜ்,பூமிநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments