வணக்கம் சென்னை என தமிழில் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி

0 652

உத்வேகத்தை வழங்கும் தமிழகம்: பிரதமர்

நான் தமிழகம் வரும்போதெல்லாம் சிலருக்கு பயம்: பிரதமர்

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிப்பு: பிரதமர்

''பாஜகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரிப்பு''

ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் மக்களால் உத்வேகம் அடைகிறேன்: பிரதமர்

சென்னை திறன், வணிகம் மற்றும் பாரம்பர்யத்தின் மையமாக விளங்குகிறது: பிரதமர்

இந்தியாவின் வளர்ச்சியை கட்டமைப்பதில் சென்னைக்கு முக்கிய பங்கு: பிரதமர்

இந்தியாவின் வளர்ச்சியை கட்டமைப்பதில் சென்னைக்கு முக்கிய பங்கு: பிரதமர்

சில ஆண்டுகளாக நான் தமிழகம் வரும்போதெல்லாம் சிலருக்கு பயம் ஏற்படுகிறது: பிரதமர்

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது: பிரதமர்

தமிழகத்தில் பாஜக வாக்காளர்கள் அதிகரித்திருப்பதை சென்னையில் கண்கூடாக பார்க்கிறேன்: பிரதமர்

பாஜகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரிக்கிறது: பிரதமர்

சென்னை போன்ற நகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றுகிறது: பிரதமர்

சென்னைக்கு ஏராளமான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது: பிரதமர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிரமங்களை குறைப்பதற்கு பதில் திமுக அரசு அதிகப்படுத்தியது: பிரதமர்

மக்களின் சிரமங்களை குறைப்பதை விடுத்து பிரச்சனை இல்லாததுபோல் ஊடகங்களில் காட்ட முயன்றனர்: பிரதமர்

”மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு இடையூறாக உள்ளது: பிரதமர்”

மக்கள் துன்பத்தில் இருந்தபோது திமுக அரசு உதவவில்லை: பிரதமர்

”திமுக அரசுக்கு மக்களின் துயரங்களை பற்றி கவலை இல்லை”

கொரோனா காலத்தில் இலவச உணவு தானியங்கள்: பிரதமர்

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு இடையூறாக உள்ளது: பிரதமர்

மக்கள் துன்பத்தில் இருந்தபோது திமுக அரசு உதவவில்லை: பிரதமர்

திமுக அரசுக்கு மக்களின் துயரங்களை பற்றி கவலை இல்லை: பிரதமர்

சென்னை மக்களின் துயரத்தை அதிகமாக்குகிறது திமுக: பிரதமர்

பாஜக அரசு மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு உங்களுக்காக பணியாற்றுகிறது: பிரதமர்

மத்திய அரசு ரேசனில் இலவச அரிசி வழங்குகிறது, இலவச கொரோனா தடுப்பூசி வழங்கியது: பிரதமர்

மத்திய பாஜக அரசு தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு செயல்படுகிறது: பிரதமர்

பல லட்சம் கோடி நிதி நேரடியாக மக்களின் கணக்கில் மத்திய அரசால் வரவு வைக்கப்பட்டுள்ளது: பிரதமர்

பல லட்சம் கோடியை சுருட்டுவது கடினமாக உள்ளது என்பதே திமுகவின் மனக்குறை: பிரதமர்

''திமுகவினர் கொள்ளையடித்த பணம் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படும்''

திமுகவினர் கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மீண்டும் மக்களுக்கு வழங்கப்படும் என்பது மோடியின் உத்தரவாதம்: பிரதமர்

தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டேன்: பிரதமர்

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் குடும்பத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியல் செய்கின்றன: பிரதமர்

என்னுடைய நோக்கம் நாட்டு மக்களை நினைத்து அரசியல் செய்வது தான்: பிரதமர்

வாரிசு அரசியல் செய்தவர்கள் ஆட்சியில் நாட்டில் பல லட்சம் வீடுகளில் மின்சாரம் இன்றி வெளிச்சம் இன்றி இருந்தது: பிரதமர்

எனது ஆட்சியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது

''கல்பாக்கம் ஈனுலையால் இந்தியா வளர்ச்சியடையும்''

கல்பாக்கத்தில் இன்று முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஈனுலை தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது: பிரதமர்

கல்பாக்கம் ஈனுலை செயல்பட தொடங்கும் போது உலகின் 2ஆவது வளர்ந்த நாடாக இந்தியா திகழும்: பிரதமர்

குறிக்கோள் உயர்ந்ததாக இருக்கும்போது அதற்காக மேற்கொள்ளும் முயற்சியும் கடினமாக தான் இருக்கும்: பிரதமர்

பாரதம் மின்சக்தி தேவைக்காக எவ்வளவு பெரிய பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது என்பது தெரியுமா?: பிரதமர்

''50 நாட்களில் அபரிமிதமான மின் திட்டங்கள்''

கடந்த 50 நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின் சக்தி திட்டங்களை பற்றி மட்டுமே நான் பட்டியலிட்டுள்ளேன்: பிரதமர்

தெலங்கானாவில் 1,600 மெ.வா. அனல் மின் நிலையத்திற்காக இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன்: பிரதமர்

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பசுமை ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை தொடங்கி வைத்தேன்: பிரதமர்

''ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம்''

வீடுகளுக்கான சூரிய மின் சக்தி தகடு பொருத்தும் திட்டம் 75,000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது: பிரதமர்

நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் சூரிய வீடுகள் திட்டம் மூலம் கிடைக்கும்: பிரதமர்

தேவைக்கு மிஞ்சி அதிகமாக உள்ள மின்சாரத்தை நீங்களும் விற்று லாபம் பார்க்கலாம்: பிரதமர்

வீடுகளின் மேற்கூரையில் நீங்கள் மின் தகடுகளை அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும்: பிரதமர்

''குடும்பம் இருப்பது கொள்ளையடிப்பதற்கான லைசன்ஸ் அல்ல''

''நான் தான் மோடியின் குடும்பம்''

எனக்கு குடும்பமில்லை என மீண்டும் மீண்டும் கூறுபவர்களின் குறிக்கோள் குடும்ப நலம் மட்டுமே: பிரதமர்

வீட்டை விட்டு வெளியேறிய நான் தேசத்தை குடும்பமாக கொண்டிருக்கிறேன்: பிரதமர்

குடும்பம் இருக்கிறது என்பது தேசத்தை கொள்ளையடிக்கலாம் என்பதற்கான லைசன்ஸ் அல்ல: பிரதமர்

நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் அனைவரும் எனது குடும்பத்தினர்: பிரதமர்

நான் தான் என பிரதமர் கூற மோடியின் குடும்பம் என முழக்கமிட்ட பாஜகவினர்

மோடி மோடி என்று முழக்கமிட்ட பாஜகவினரை கைக்கூப்பி வணங்கினார் பிரதமர்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாரத மக்களே எனது குடும்ப சொந்தங்கள்: பிரதமர்

 மக்கள் அனைவருக்கும் அவர்களது உரிமை கிடைப்பதற்கு என்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன்: பிரதமர்

இண்டியா கூட்டணி ஊழல் கூட்டணி: பிரதமர்

காங்., திமுக மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் மூழ்கியுள்ளனர்: பிரதமர்

இண்டியா கூட்டணிக்கு ஊழல், தேசத்தின் சொத்துக்களை கொள்ளையடித்தல், குடும்பத்தை பற்றி யோசிப்பதை விட வேறு சிந்தனை இல்லை: பிரதமர்

இண்டியா கூட்டணியினரால் தான் இளைஞர்கள் அரசியலில் இருந்து விலகி நிற்கின்றனர்: பிரதமர்

ஊழலில் திளைப்பவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பின் மூலம் தகர்த்துள்ளது: பிரதமர்

தேசத்தை தூய்மையாக்கியே தீருவேன்: பிரதமர்

எனக்கு பிடித்த பணி தேசத்தை தூய்மையாக்குவது: பிரதமர்

எத்தனை சிரமங்கள் ஏற்பட்டாலும் தேசத்தை நான் தூய்மையாக்கியே தீருவேன்: பிரதமர்

குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்கள் கடின உழைப்புக்கு வெகு தொலைவில் உள்ளவர்கள்: பிரதமர்

குடும்ப அரசியலில் உள்ளவர்கள் ஆணவத்தை வெளிப்படுத்துபவர்கள்: பிரதமர்

குடும்ப அரசியல் செய்பவர்கள் தேசத்தின் மக்களை அடிமைகளாக கருதும் குணம் கொண்டவர்கள்: பிரதமர்

குடும்ப அரசியலால் ஏராளமானோரின் ஆசைகள் நிறைவேறாமல் போய்விட்டது: பிரதமர்

குடும்ப அரசியலால் பதவி பெற்ற ஒருவர் தமிழக அரசில் இடம்பெற்று ஆணவத்துடன் செயல்பட்டு வருகிறார்: பிரதமர்


''தமிழகத்தில் கவலை அளிக்கும் போதைப்பொருள் புழக்கம்''

போதைப்பொருள் - திமுக மீது குற்றச்சாட்டு

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது என் மனதில் வலியை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்களின் உதவியுடன் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது: பிரதமர்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதால் வருங்கால சந்ததியினர் குறித்து எனக்கு கவலை ஏற்பட்டுள்ளது: பிரதமர்

தமிழகத்தில் பெற்றோருக்கு உள்ள அதே கவலை என் மனதையும் கடுமையாக அரிக்கிறது: பிரதமர்

பாஜகவை தமிழக மக்கள் ஆதரித்தால் போதைப்பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மோடியின் கியாரண்டி: பிரதமர்

தமிழகம் வளர்ச்சியடைவதற்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர்

வளர்ச்சியடைந்த தமிழகம் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு அடிப்படையாக இருக்கும்: பிரதமர்

சென்னையில் திரண்டுள்ள பாஜக தொண்டர்கள் எனக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளீர்கள்: பிரதமர்

இந்த பெருங்கூட்டம் டெல்லியில் குளிர்சாதன அறையில் அமர்ந்து பொய் செய்திகளை உருவாக்குபவர்களின் தூக்கத்தை கெடுக்கும்: பிரதமர்

வந்தே மாதரம் என முழக்கமிட்டு உரையை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments