பேச்சுரிமையை துஷ்பிரயோகம் செய்துவிட்டு நீதிமன்ற பாதுகாப்பு கோறும் அமைச்சர் உதயநிதி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

0 447

கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அமைச்சர் உதயநிதி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்கக் கோரி உதயநிதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு, சனாதனம் தொடர்பான கருத்துக்களின் விளைவுகள் உதயநிதிக்கு தெரியாதா? அவர் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர் எனக்கூறிய நீதிபதிகள், அமைச்சராக இருப்பவர் தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும், சொல்லும் கருத்துக்களின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 15-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments