2014, மார்ச் 14-ஆம் தேதி 227 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்கத் தயார்: மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்
227 பயணிகளுடன் மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க தயாராக உள்ளதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆசியான் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 2014-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி புறப்பட்ட போயிங் விமானம், தென் சீன கடல் வழியாக சென்றபோது திடீரென ரேடாரில் இருந்து மாயமானது.
மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து சுமார் ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் நடத்திய தேடுதல் வேட்டையில் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காததால் 2017 ஆம் ஆண்டுடன் விசாரணை முடித்துவைக்கப்பட்டது.
மக்கள் உயிர் தொடர்பான விஷயம் என்பதால் மீண்டும் விசாரணையைத் தொடங்கத் தயாராக உள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
Comments