நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் தண்டனைக்குரியவர்கள்: உச்சநீதிமன்றம்

0 354

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கேள்வி எழுப்பவும், ஓட்டெடுப்பின் போது வாக்களிக்கவும் லஞ்சம் பெறும் உறுப்பினர்கள் தண்டனைக்குரியவர்கள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அப்படிப்பட்ட லஞ்சப் பேர்வழிகள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது.

1998-இல் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்கள் கூட்டணியில் இருந்து கொண்டே மாற்று கட்சிக்கு வாக்களித்தனர்.

அது  தொடர்பான வழக்கில், எம்.பி.க்களுக்கு சிறப்பு உரிமை இருப்பதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 1998-இல் கூறி இருந்தது. அத்தீர்ப்பை 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தீர்ப்பு மாற்றி அமைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments