ஆனந்த்அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு விழா

0 540

அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் நடிகைகள் திரளாகக் கலந்துக் கொண்டனர். அமிதாப் பச்சன் ஐஸ்வர்யாராய், அபிசேக் பச்சன் உள்ளிட்ட தமது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டார். 

ஜித்தேந்திரா, ரஜினிகாந்த், ஷாருக்கான் சல்மான்கான் உள்ளிட்டோரும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

நடிகைகள் மாதுரி தீக்சித், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, கத்ரினா கைப், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதே போன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பர்க், ஜக்கி வாசுதேவ், பாப் பாடகி ரிஹானா கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

இருநாள் வண்ணமயமான பல்வேறு நிகழ்ச்சிகள் விருந்துகளுக்குப் பின்னர் நேற்று விருந்தினர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments