சென்னையில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்

0 499

சென்னையில் நாளை மாலை 5 மணியளவில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், விழா  நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா சாலை, நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

காந்தி மண்டபம் சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, 100 அடி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments