போலியோ சொட்டு மருந்து போடும் முகாம்களில் ஆய்வு செய்து, பின் தனது 3 மாத குழந்தைக்கு சொட்டு மருந்து போட்டுச் சென்ற திருவள்ளூர் ஆட்சியர்
காலை முதல் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து போடும் முகாம்களில் ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பின்னர் மனைவியுடன் வந்து தனது 3 மாத குழந்தைக்கும் சொட்டு மருந்து போட்டுச் சென்றார்.
போலியோ சொட்டு மருந்தை திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி ஆட்சியரின் மூன்று மாத குழந்தைக்கு வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட ஆயிரத்து 516 முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில், அரசுப் பணிகளுக்கு இடையே ஆட்சியர் பிரபுசங்கர், தந்தை என்ற கடமையையும் ஆற்றினார்.
Comments