ஆண்டவனும், ஆள்பவர்களும் முடிவு செய்வார்கள்.. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழிசை பதில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவர்களும் முடிவு செய்வார்கள் என்று பதிலளித்தார்.
Comments