ஸ்பெயின் நாட்டு பனிச்சறுக்கு விளையாட்டு.... ஆடவர் பிரிவில் 19 வயது ஜெர்மனி வீரர் அபாரமாக விளையாடி முதலிடம்
ஸ்பெயின் நாட்டின் உறைபனி நிறைந்த சியரா நெவாடா பகுதியில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
ஆடவர் பிரிவில் ஜெர்மனி நாட்டின் 19 வயது வீரர் லியோன் உல்ப்ரிக் அசாத்தியமாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றார்.
மகளிர் பிரிவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று பனிச்சறுக்கு விளையாட்டில் அசத்தினர். பிரிட்டன் வீராங்கனை சார்லோட் பேங்க்ஸ், ((Charlotte Bankes)) சக போட்டியாளர்களை முந்திச் சென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
Comments