பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் - 8 தனிப்படைகள் அமைத்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சென்றும் விசாரணை நடத்தி வருவதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர். முதலமைச்சர் சித்தராமையாவுடன் சேர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்த கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, குண்டு வைத்த நபர் அரசு பேருந்தில் உணவகத்துக்கு வந்ததாகவும், அந்த பேருந்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் அந்நபரின் உருவம், நடவடிக்கைகள் தெளிவாக பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
உணவகத்தில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அப்பகுதியில் இருந்து செல்போன் அழைப்புகளை செய்த சில சந்தேகத்துக்குரிய எண்கள் தற்போது ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Comments