போதை மாஃபியா ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. வேகம் எடுக்கிறது விசாரணை..!

0 556

2000 ஆயிரம் கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 8 வங்கிகளில் அவர் வைத்திருந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன...

தமிழகத்தை உலுக்கி உள்ள 2000 ஆயிரம் கோடி ரூபாய் போதை பொருள் வழக்கில் கடத்தல் மாஃபியா ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தேடிவருகின்றனர். சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள அவரது 3 அடுக்கு மாடி வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு சொந்து ஆவணங்களையும், வரவு செலவு கணக்கு ஆவணங்களையும் கைப்பற்றியதுடன் அங்கு தவித்த இரு பெர்ஸிய பூனைக்குட்டிகளையும் மீட்டு உணவளித்து வருகின்றனர்.

ஜாபர் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார், காசோலை மூலம் கொடுத்தது மற்றும் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் கொடுத்தது, மற்றும் ரொக்கமாக கொடுத்தது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ள போதை தடுப்பு போலீசார் , தலைமறைவாக இருக்கும் ஜாபரின் 8 வங்கிக் கணக்குகளை முதற்கட்டமாக முடக்கி உள்ளனர். அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து இனி அவரால் பணம் எடுக்க இயலாது என்றாலும், கோடிக்கணக்கில் ரொக்கப்பணம் அவருடன் எப்போது இருக்கும் என்றும் சொல்லப்பட்டுகின்றது. 

அமீரின் அச்சமில்லை அச்சமில்லை, உயிர் தமிழுக்கு, மாயவலை, இறைவன் மிகப்பெரியவன் ஆகிய படங்களுக்கும், 4 ஏஎம் கஃபே, லா கஃபே, சலீம் பிரியாணி ஆகிய உணவகங்களுக்கும், ஜே.எஸ்.எம் ரெசிடன்ஸி , ஜூகோ ஓவர்சீஸ் பிரவேட் லிமிடெட் என்ற ஏற்றுமதி நிறுவனம் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்ததாக கூறப்படுகின்றது.

போதை பொருள் கடத்தலுக்கு ஜாபருக்கு உடந்தையாக இருந்த சில நபர்களைக் கண்டறிந்துள்ள போலீசார் அவர்களை அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments