கன்னியாகுமரியில் கழிவுகளை கொட்ட வந்த கேரள வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்
கேரளாவில் மறுசுழற்ச்சிக்கு அனுமதி இல்லாதததால் அங்கு இருந்து கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் மலையடிவாரத்தில் உள்ள பன்றி பண்ணையில் கொட்ட வந்த லாரிகளை கிராம மக்கள் மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி.விஜய் வசந்த், வாகனத்தை பறிமுதல் செய்யவும், உடந்தையாக செயல்பட்ட பன்றி பண்ணைகளை சீல் வைக்கவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
கோழிக் கழிவுகளை, மருத்துவக் கழிவுகளை பன்றிப்பண்ணை உள்ள பகுதியில் ஆழக் குழி தோண்டி புதைப்பதால் அவை மக்கி குடிநீரில் கலந்து தொற்று நோய் பரவுகிறது என்பது கிராம மக்களின் புகார்.
Comments