மின் மோட்டர்கள், காற்றாலைகளின் காப்பர் கேபிள்கள் திருட்டு, நெல்லையில் இருந்து திருப்பூருக்கு வந்து கைவரிசை

0 405

திருப்பூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில், மின் மோட்டார்களையும், காற்றாலைகளில் இருந்து காப்பர் கேபிள்களையும் திருடி வந்த 10 பேர் கும்பலை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கடந்த 3 மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில், விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மின் மோட்டரை திருட முயன்ற 4 பேரை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்தனர். 

அவர்களுக்கு தர்மடி கொடுத்து விசாரித்தபோது நெல்லையில் இருந்து வந்து வாடகைக்கு வீடு எடுத்து திருட்டில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது.

அந்த வீட்டில் இருந்த மேலும் 6 பேரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments