குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது - முதலமைச்ச் சித்தராமையா
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் 6 வாடிக்கையாளர் உள்பட 9 பேர் காயமடைந்தனர். ரவா இட்லி வாங்குவதற்காக வந்த நபர், தான் கொண்டுவந்த பையை அங்கே வைத்துவிட்டுச் சென்றதும், அந்தப் பையில் ஒரு மணி நேரத்தில் வெடிக்கும் வகையில் நேரம் செட் செய்யப்பட்ட குண்டு வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் சித்தராமையாவும், மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவும் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக கோரியுள்ளது.
Comments