ஜாபர் போதை விவகாரம் போலீசை வரச்சொல்லுங்க விசாரணைக்கு தயார்...! அமீர் சுல்தான் சொல்கிறார்
போதை பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக் குறித்து விசாரிக்க போலீசார் அழைத்தால் செல்லத் தயாராக இருப்பதாக இயக்குநர் அமீர் வீடியோ வெளியிட்டுள்ளார்
மது, விபச்சாரம், வட்டி இது போன்ற விஷயங்களுக்கு எதிரான மார்க்கத்தை பின்பற்றுபவன் நான் என்று தெரிவித்துள்ள அமீர், இது போன்ற குற்றச்செயலில் தொடர்பு படுத்தி பேசுவது அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்
ஜாபரின் போதை பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு போலீசார் அழைத்தால் செல்ல தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே ஜாபர் சாதிக்கை, தனது உறவினர் என்றும், காபி கடை பார்ட்னர் என்றும் அமீரே தெரிவித்த வீடியோக்களின் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் தான் விசாரணைக்கு தயாராக இருப்பதாக தன்மீது பேரன்பு கொண்டவர்கள் மூலமாக போதை தடுப்பு போலீசாரை விசாரணைக்கு அழைத்துள்ளார் அமீர் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
Comments