வனத்துறை துப்பாக்கி சூட்டில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்காக பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
தேனி மாவட்டம் கூடலூர் அருகே, கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி, வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஈஸ்வரன் என்ற விவசாயி, வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாகவும், தட்டிக்கேட்ட அதிகாரிகளை கத்தியால் தாக்க முயன்றபோது அவர்கள் தற்காப்புக்காக ஈஸ்வரனை சுட்டு கொன்றதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஈஸ்வரனின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை வழக்காக பதிவு செய்து எஸ்.பி. விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், அதில் தொடர்புடைய வனவர் திருமுருகனையும், வன காவலர் ஜார்ஜையும் கைது செய்யுமாறு ஆணை பிறப்பித்தார்.
Comments