அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி.. கல்குவாரிக்கு ஆதரவாக பேசியவரை சுற்றி வளைத்து சுளுக்கெடுத்தனர்..! மைக்க புடிச்சதுக்கே இந்த அடியா..?

0 973

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் கல்குவாரி அமைக்க நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கல்குவாரிக்கு ஆதரவாக பேசிய நபருக்கு தர்ம அடி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ஒரு ஊருக்கு கோயில் எப்படி முக்கியமோ அது போல கல்குவாரியும் அவசியம் என்று கருத்து சொன்னதால் தர்ம தாக்குதலுக்குள்ளான கமிஷன் பப்ளிக் இவர் தான்..!

அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் புதிதாக சுமார் 11 ஹெக்டேர் பரப்பளவில் கல்குவாரி அமைக்க விஷ்ணு சூர்யா என்ற தனியார் நிறுவனம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு எதிராகவும் , சிலர் ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி என்பவர் கல்குவாரிக்கு ஆதரவாக பேசத்தொடங்கினார். கல்குவாரியை கோவிலுடன் ஒப்பிட்டு பேசியதால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் ஆவேசமாகி குருசாமியை சுற்றி வளைத்து அடி வெளுத்தனர்

கல்குவாரி கும்பலிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு குருசாமி பேசுவதாக குற்றஞ்சாட்டியதோடு, அவரது கைகளில் இருந்து மைக்கை பறித்து புரட்டி எடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

அதனை அடுத்து போலீசார் மண்டபத்திற்குள்ளே வந்து அனைவரையும் எச்சரிக்கை செய்தனர். பின்னர் மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. வேண்டும் வேண்டாம் என்ற கருத்தை மட்டும் சொல்லுமாறு கூறி கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது.

சிலர் நேரடியாகவும் தங்களது கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினர். இந்த கருத்து கேட்பு கூட்டம் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அனுப்பப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து கல் குவாரிக்கு உரிமம் வழங்குவதா கூடாதா என மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் முடிவு செய்யும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments