ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் நடந்த விதிமீறல்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த விபரங்களை சுட்டிக்காட்டி, தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் பலமுறை வாய்ப்புகள் அளிக்கப்பட்டும், கழிவுகளை முறையாக அகற்ற ஸ்டெர்லைட் ஆலை தவறிவிட்டதாகவும், இந்த ஆலையை சுற்றி வசித்துவரும் மக்களின் வாழ்வாதாரமும் முக்கியம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆலையை மூடுவது குறித்த சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த விதிமீறலும் இல்லை என்பதால், அத்தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Comments