பெங்களூரு புறநகர் எம்பி பேச்சை கண்டித்த நிர்மலா சீதாராமன்
நிதி ஆணையத்தின் பேச்சை கேட்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்றும், மாநிலங்கள்தான் தங்களது தேவைகளை தீர்க்கமாக வலியுறுத்தி ஆணையத்திடம் இருந்து நிதியை கேட்டுப்பெறவேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய அரசு தென்மாநிலங்களுக்கு மானியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டினால், தனிநாடு கோரும் நிலைக்கு தள்ளப்படும் என பெங்களூரு புறநகர் தொகுதி எம்பி சுரேஷ் பேச்சை கண்டித்த அவர், இதுபோன்ற எண்ணங்கள் ஆபத்தானவை என்றார்.
Comments