கஷ்டப்பட்டு படிக்க வைத்த மகன்கள் சோறு போடவில்லை என தந்தை மாவட்ட ஆட்சியரிடம் கதறல்

0 568

கஷ்டப்பட்டு படிக்க வைத்த 2 பசங்களும் ஒரு வாய் சோறு கூட போட மறப்பதாக திருத்துறைப்பூண்டியை அடுத்த எழிலூரைச் சேர்ந்த தந்தை ஒருவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழுதபடி தெரிவித்தார்.

இருவரும் தம்மை கவனிக்காததால் முதுகு தண்டு வட அறுவை சிகிச்சை செய்து நடக்க முடியாமல் தவிக்கும் தமக்கு உதவுமாறு லட்சுமணன் என்ற அந்த முதியவர் கேட்டுக்கொண்டார்.

ஆண்டவன் தனக்கு ஒரு பெண் பிள்ளையை கொடுக்கலையே என்று புலம்பிய லட்சுமணனிடம், 2 ஆயிரம் ரூபாய் மாத உதவி பெறுவதற்காக ஆதார் அட்டையை எடுத்து வருமாறு மாற்றுத்திறனாளி அலுவலர் கூறினார்.

அதற்கு, தமது ஆதார் கார்டை தனது மகன் வாங்கி வைத்துக் கொண்டதாகவும் டீக்கடையில் எச்சில் கிளாஸ் கழுவி தாம் சம்பாதிக்கும் காசைக் கூட அவர்கள் அடித்துப் பிடுங்கிக் கொள்வதாக லட்சுமணன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments