தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் உள்பட 4 பேர் கைது

0 399

தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளி தாளாளர் உள்பட 4 பேரை கைது செய்த போலீஸார், பா.ஜ.க மாவட்டத் தலைவர், தி.மு.க ஒன்றிய செயலாளர் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

மடத்தினர் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதனை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவதாக ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணை நடத்திய போலீஸார் செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு உள்பட 4 பேரை கைது செய்தனர்.

பணம் கேட்டு மிரட்டல் விடுக்க தூண்டுதலாக இருந்ததாக பா.ஜ.க மாவட்டத் தலைவர் அகோரம், தி.மு.க ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார், ஆதீன பணிவிடை செந்தில், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன்
உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments