உலகின் முதல் ஜெட் சூட் பந்தயம் துபையில் நடந்தது.. ஒரு பெண் உள்பட 8 பேர் போட்டியில் பங்கேற்பு
உலகின் முதல் ஜெட் சூட் பந்தயம் துபை துறைமுகத்தில் நடைபெற்றது.
ஆயிரத்து 500 குதிரைத் திறன் கொண்ட சூட்களைப் பயன்படுத்தி கடலுக்கு மேல் பகுதியில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து சென்றனர்.
ஐந்து கேஸ் டர்பைன் ஜெட் என்ஜின்கள் பொறுத்தப்பட்ட இந்த ஜெட் சூட்கள் திசைக் கட்டுப்பாட்டை செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியில் பெண் வீராங்கனை ஒருவர் உள்பட 8 பேர் பங்கேற்றனர்.
Comments