பாலாவின் அடி தாங்காமல் வணங்கான் படத்திலிருந்து ஓட்டம் பிடித்த நடிகை..! அசிங்கமா திட்டி அடித்ததாக வேதனை

0 1046

இயக்குனர் பாலாவின் அடிதாங்காமல் வணங்கான் படத்தில் இருந்து விலக நேரிட்டதாக பிரபல மலையாள நடிகை ஒருவர், தெரிவித்துள்ளார்

இயக்குனர் பாலா படம் என்றாலே அதில் நடிக்கும் நடிகர்களுக்கு அடிக்கும் உதைக்கும் பஞ்சம் இருக்காது.. அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் தொடங்கப்பட்ட வணங்கான் படம் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைக்குமாறி அருண் விஜய் நடிப்பில் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ளது

கன்னியாகுமரியில் தொடர்ந்து 10 நாட்களாக பல கிலோ மீட்டர் தூரம் சூர்யாவை ஏன் ஓடவைக்கிறோம்...? எதற்காக ஓட வைக்கிறோம் ? என்று எந்த காரணமும் கூறாமல் ஓடவிட்டு வாட்டி வதைத்ததால் சூர்யா படத்தில் இருந்து கழன்று கொண்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த படத்தில் முதலில் நாயகியாக நடித்த மலையாள நடிகை மமிதாபைஜூவும் சில தினங்களில் விலகினார். இந்த நிலையில் வணங்கான் படத்தில் இருந்து தான் விலகியது ஏன் ? என்று மமிதா அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்

வணங்கான் படத்தில் வில்லடிச்சா மாடன் என்ற காட்சிக்காக, வில்லு பாட்டு பாடும் பெண் போல நடிக்க வைக்கப்பட்ட மமிதாவுக்கு, வில்லு பாட்டு பாடுபவர்கள் குறித்து எந்த ஒரு அனுபவமும் இல்லாத நிலையில் ஒரு பயிற்சியாளரை வைத்து ஒரு முறை சொல்லிக் கொடுத்து விட்டு உடனடியாக டேக் சென்றுள்ளார் பாலா, தான் தயாராக வில்லை என்று தெரிவிக்க முயன்றும் இயலாமல் தான் தவித்த நிலையில், டேக்கை சரியாக செய்ய வில்லை என்று பாலா தன்னை திட்டதொடங்கியதாகவும், தொடர்ந்து அந்த காட்சியில் 3 டேக்... வாங்கியதால் தன்னை முன்னால் போகவிட்டு பின்புறமாக இருந்து முதுகில் ஓங்கி அறைந்து அசிங்கமாக திட்டியதாகவும் தெரிவித்துள்ளார் மமிதா

பாலாவின் அடி தாங்காமல் வணங்கான் படத்தில் இருந்து விலகியதாக மமிதா தெரிவித்துள்ள நிலையில் பாலா கையால் அடிபட்டால் தேசிய விருது கிடைக்கும் என்றும் ஆசிரியர் அடித்தால் பள்ளிக்கு போகாம விட்டு விடுவீர்களா என்றும் பாலாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவிக்கும் நிலையில் சைக்கோவை படத்தில் பார்த்திருக்கிறோம்... இயக்குனர் சைக்கோவாகி படம் எடுப்பதை இப்பதான் பார்க்கிறோம் என்று ஒரு தரப்பினர் பாலாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments