கல்வி சுற்றுலா வந்த ஆந்திர மாணவர் கடலில் மாயம்
திருப்பதி அடுத்த சந்திரகிரியைச் சேர்ந்த தனியார் கல்லூரி டிப்ளமோ மாணவர்கள் 19 பேரை பேராசிரியர் கோவிந்தராஜ் மகாபலிபுரத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறிவிட்டு, புதுச்சேரிக்கு கூட்டிச் சென்றுள்ளார்.
வழியில் தந்திராயன் குப்பம் கடலில் குளித்தபோது மாணவர் தனுஷ் ராட்சத அலையில் சிக்கி மாயமானதால், பேராசிரியர் தப்பிச் சென்றுவிட்டார்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments