ஒலிம்பிக் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ரகசியத் தகவல்கள் திருட்டு?
பாரிஸில் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ரகசியத் தகவல்கள் அடங்கிய பை திருடுபோனதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது போலீசார், பாதுகாப்பு படையினர் என தினமும் 37 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ரகசியத் தகவல்கள் அடங்கிய லேப்டாப் மற்றும் 2 பென் டிரைவ்களை, மாநகராட்சி அதிகாரி ஒருவர் பையில் வைத்து ரயிலில் எடுத்துச்சென்றுள்ளார்.
இருக்கைக்கு மேல் உள்ள லக்கேஜ் கம்பார்ட்மெண்டில் வைக்கப்பட்டிருந்த பையை யாரோ திருடிசென்றுவிட்டதாக அவர் அளித்த புகாரின் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Comments