செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் சாட்சிகளை கலைக்கமாட்டார் என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துவிட்டார்.
ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முதல்நாள்தான் அமைச்சர் பதவியில் இருந்து மனுதாரர் விலகியதாகவும் 8 மாதங்களாக சிறையில் அமைச்சராக நீடித்த அவர், கட்சியில் செல்வாக்கை தொடர்ந்து பெற்று வருவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
எனவே, ஜாமீன் வழங்கினால், அது இந்த சமுதாயத்துக்கு தவறான தகவலை தெரியப்படுத்தும் என்றும் நீதிபதி கூறினார்.
நீண்ட காலம் சிறையில் இருப்பதாக மனுதாரர் கூறிய நிலையில், வழக்கை தினந்தோறும் விசாரித்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கும்படி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Comments