56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் 20 இடங்களில் போட்டியின்றியும் 10 இடங்களில் தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி

0 472

அண்மையில் நடந்து முடிந்த 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் 20 இடங்களில் போட்டியின்றியும் 10 இடங்களில் தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.

கூடுதலாக 2 சீட்களில் கிடைத்த வெற்றியால், மாநிலங்களவையில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 117ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பான்மைக்கு 121 இடங்கள் தேவை என்ற நிலையில், உத்தரபிரதேசத்திலும், ஹிமாச்சலிலும் தலா ஒரு தொகுதியில் கூடுதலாக பாஜகவுக்கு கிடைத்த வெற்றியால் மாநிலங்களவையில் பெரும்பான்மையை நெருங்கியுள்ளது.

பாஜகவின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதும், கூட்டணி கட்சிகள் 20 இடங்களை வைத்துள்ளதாலும், பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்து வருவதாலும், மூன்றாவது முறையாக தேஜ கூட்டணி ஆட்சி அமைத்தால் புதிய மசோதாக்களை எளிதாக நிறைவேற்ற பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments