தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டும் விழா

0 345

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஏவுதளத்திலிருந்து சிறிய ரக ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

காற்றின் திசைவேகத்தை அளவிடுவதற்காக ஆர் ஹெச் 200 சவுண்டிங் என்ற பெயர் கொண்ட அந்த ராக்கெட், இன்று மதியம் 1.30 மணியளவில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில் செயற்கைக் கோள்களுக்குப் பதிலாக காற்றின் திசைவேகத்தை அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் காற்றின் திசை வேகம் எவ்வாறு இருக்கும் என்பதை இந்தக் கருவி மூலம் அறிந்து கொள்ள முடியும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments