தூத்துக்குடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கிறார்: பிரதமர் மோடி

0 363

தூத்துக்குடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 

மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர், தூத்துக்குடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் காலை 9:45 மணியளவில் இறங்குகிறார்.

தூத்துக்குடி துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் திட்டம், குலசேகரபட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றை அவர் துவங்கி வைக்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் 3 ஆயிரம் போலீஸாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments