இந்த சுவரு இந்தியனுக்காக கண்டெய்னர்களில் கமல் ஷங்கரின் அடுத்த பிரமாண்டம்..!

0 848

அந்நியன் படத்தின் பாடல் காட்சியில் மலைகளுக்கும் சாலைகளுக்கும் பெயிண்ட் அடித்து பிரமாண்டத்தை காட்டிய இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சிக்காக சென்னை திருவொற்றியூரில் உள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளிலும், சாலையில் செல்லும் கண்டெய்னர் லாரிகளிலும் இந்தியன் கமலின் உருவத்தை வரைந்து அதகளப்படுத்தி உள்ளார்.

அந்நியன் படத்தில் ஒரு பாடல்காட்சிக்காக மலைகளையும் சாலைகளையும் கலர்புல் ஓவியங்களால் அலங்கரித்தவர் இயக்குனர் ஷங்கர்.

நண்பன் படத்தில் ரெயில் முழுவதையும் வர்ணம் பூசி ஓடவிட்டார்..!

அந்த வரிசையில் இந்தியன் 2 படத்திற்காக சென்னை திருவொற்றியூர்-எண்ணூர் விரைவு சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான திருச்சினாங்குப்பம் மீனவக் குடியிருப்பு சுவர்களில் இந்தியன் தாத்தா கமல்ஹாசனின் உருவம் ஓவியங்களாக பிரமாண்டமாக வரையப்பட்டுள்ளன.

அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்துவதை தவிர்த்து அரசின் பராமரிப்பில் உள்ள குடியிருப்பில் நேரடியாக இரவு பகலாக இந்த படப்பிடிப்பு நடந்து வருகின்றது. அந்த 4 சுவர்களிலும் பிரமாண்டமாக வரையப்பட்டுள்ள கமலின் ஓவியத்தை வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்ப்பதோடு, செல்போனில் படம் எடுத்தும் செல்கின்றனர்

வெளிநாட்டில் இருந்து இந்தியன் தாத்தா லஞ்சத்தை ஒழிக்க மீண்டும் வந்து விட்டார் என்று மக்கள் கொண்டாடும் விதமாக படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்காக சுவற்றில் மட்டுமல்லாமல் கண்டெய்னர் லாரிகளிலும் இந்தியன் தாத்தா கமல்ஹாசன் ஓவியங்களை வரைந்து அதகளப்படுத்தி உள்ளனர். நீண்ட வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் 3-வது பகுதியும் சேர்த்தே தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments