சந்தேஷ்காலி வன்முறை- தொடர்புடைய நபரை கைது செய்ய மேற்கு வங்க அரசுக்கு ஆளுநர் ஆனந்தபோஸ் உத்தரவு
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1709083174212267.jpg)
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாலியல் வழக்கில் தொடர்புள்ள திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகரை உடனடியாக கைது செய்ய அம்மாநில ஆளுநர் ஆனந்தபோஸ் உத்தரவிட்டுள்ளார்.
மாநில அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாலியல் குற்றச்சாட்டு மற்றும் நில அபகரிப்பு மோசடியில் சிக்கியுள்ள ஷாஜஹான் ஷேக்கை கைது செய்யத் தவறினால் 72 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சந்தேஷ்காலி வன்முறையில் தொடர்புள்ள பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஷாஜஹான் ஷேக்கை கைது செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றமும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments