ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் எலி தொல்லை- 3 நாட்களாக நிறுத்தி வைப்பு

0 463

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் எலி இருந்ததால், கொழும்பு விமான நிலையத்தில் 3 நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டு ஏதேனும் உபகரணங்களை எலி கடித்து வைத்துள்ளதா என முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

எலி இறந்து கிடந்ததாக தெரிவித்த விமான நிலைய அதிகாரி, 3 நாட்களாக விமானம் இயக்கப்படாததால் திட்டமிட்டப்படி விமான சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் இயங்கிவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது 20 விமானங்களை மட்டுமே இயக்கிவருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments