தொப்பூர் கணவாயில் ரூ.775 கோடியில் சுமார் 6.6 km உயர்மட்ட பாலம்
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தொப்பூர் கட்டமேடு பகுதியிலிருந்து சேலம் மாவட்டம் எல்லை பகுதி வரை சுமார் 6.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 775 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
இப்பகுதியில் 8 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலை வனப்பகுதி வழியாகவும், அதிக வளைவுகளையும் கொண்டதாகவும் உள்ளதால் அதிகளவிலான விபத்துகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .
உயர்மட்ட பாலம் அமைய உள்ள இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர்ஆய்வு செய்தனர்.
மேலும் உயர்மட்ட பாலம் அமைக்க சுமார் மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால் அதற்குள் விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிக அளவு விபத்துகள் ஏற்படும் சுமார் 800 மீட்டர் நீளமுள்ள சாலையை மாற்றி அமைத்து உயிரிழப்புகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
Comments