ரமலான் மாதத்தில் தற்காலிகமாக போரை நிறுத்த இஸ்ரேல் சம்மதம்
ரமலான் மாதத்தில் தற்காலிகமாக போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அடுத்த வார திங்கட்கிழமை புதிய போர் நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்திவரும் வெளிநாட்டு பிரதிநிதிகள், 40 பிணை கைதிகளை விடுவிக்க ஹமாஸும், பதிலுக்கு 400 பாலஸ்தீன சிறை கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் சம்மதித்ததாக தெரிவித்தனர்.
தினமும் காஸாவுக்குள் 500 லாரிகளில் நிவாரண பொருட்கள் கொண்டுசெல்லப்படும் எனவும், சேதமடைந்த மருத்துவமனைகளும், பேக்கரிகளும் சீரமைக்கப்படும் எனவும் சமாதான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments