வலசை வந்துள்ள ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள்...
40 நாட்கள் தாமதமாக தனுஷ்கோடிக்கு ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளன.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல், ஜனவரி மாத இறுதிவரை கண்டம் விட்டு கண்டம் தாண்டி உணவு தேடி பறவைகள் வருவது வழக்கம்.
ஆனால் இந்தமுறை கால தாமதமாகவே பறவைகள் வரத் தொடங்கின.
கடல் மாசுபாடு மற்றும் கடல் நீரின் தரம் குறைவதே இதற்கு காரணம் என்று பறவைகள் ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடி, சுற்றுலா மற்றும் ஆன்மீக தளமாக மட்டுமே பார்க்கப்படும் நிலையில், அது பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய இடமாகவும் இருப்பதால், வனத்துறையுடன் இணைந்து பொதுமக்களும் கடல் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என பறவைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments