தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது இல்லை, ஆனால் பாஜவின் இதயத்தில் தமிழகம் உள்ளது - என் மண் என் மக்கள் யத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரை

0 889


வணக்கம் பல்லடம் என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி

கொங்கு பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி: பிரதமர்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரத்தில் கொங்கு பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி

டெல்லியில் ஏசி அறையில் அமர்ந்திருப்பவர்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சி: பிரதமர் மோடி

மிகப்பெரிய அளவில் காவிக்கடல் போல் கூடியிருக்கும் மக்களைக் காண்பதில் மகிழ்ச்சி

இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு

என் மண் என் மக்கள் யாத்திரைக்கு தமிழக மக்கள் அற்புதமான வரவேற்பை அளித்துள்ளனர் என்பதற்கு நீங்களே சாட்சி

தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டத்தின்மூலம் நிரூபணம்

2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் அதிகம் பேசப்படுவது பாஜக பற்றி தான்

என் மண் என் மக்கள் என்ற பெயரே பாஜகவுக்கும் இந்த மண்ணுக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைக்கிறது

யாத்திரையை வெற்றிகரமாக நடத்தியுள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்

நாடு தான் முதன்மையானது என்பதே பாஜகவினரின் நிலைப்பாடு

2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு புதிய சரித்திரத்தை படைக்கும்

என்னைப் பொறுத்தவரை தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் பெரும் சிறப்பு மிகுந்தது

காசி தமிழ் சங்கம், செங்கோல் மூலம் தமிழுக்கு மரியாதையை செலுத்தியிருக்கிறேன்

புனிதமான செங்கோலை தேசத்தின் மிக உயரிய நாடாளுமன்றத்தில் இடம்பெறச் செய்துள்ளேன்

என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தை புதிய பாதையில் அழைத்துச் செல்கிறது

1991ல் ஒற்றுமை யாத்திரையை நான் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன்

கன்னியாகுமரி மண்ணை நெற்றியில் இட்டுக்கொண்டு அந்த யாத்திரையை தொடங்கினேன்

சிறப்பு மிக்க தமிழும், தமிழ் பண்பாடும் எனது மனதுக்கு மிக நெருக்கமானது

தமிழக மக்கள் இதயத்தில் தூய்மையானவர்கள், புத்திசாலிகளாக திகழ்பவர்கள்

தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது இல்லை, ஆனால் பாஜவின் இதயத்தில் தமிழகம் உள்ளது

காஷ்மீரில் லால் சவுக்கில் தேசியக் கொடி பறப்பதும், 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியும் வரலாறு படைத்துள்ளோம்

மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்குகிறது

தமிழ்நாட்டுக்கு 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது

மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இடம்பெற்றபோதிலும் தமிழ்நாட்டுக்கு திமுக எதுவும் செய்யவில்லை

தமிழகத்தில் மக்களுக்கு பாஜக மீது பெரும் நம்பிக்கை வந்துகொண்டிருக்கிறது

தமிழ்நாட்டில் பொய் பேசியவர்களின் ஊழல் வெளியே வந்துள்ளது

காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டுக்கு தந்ததை விட பாஜக அதிகளவில் தந்துள்ளது

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜக முன்னுரிமை அளிக்கிறது

முந்தைய கூட்டணி ஆட்சியில் முக்கியத்துறைகளை திமுக தலைவர்கள் வைத்திருந்தபோதிலும் தமிழகத்திற்கு பலனில்லை

மக்களை திசைதிருப்பி நாற்காலிகளை காப்பாற்றி கொள்ள சிலர் பொய் பேசி வருகின்றனர்

தமிழகத்தில் மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறோம்

ஏழைகளுக்காக கடுமையாக உழைப்பதே மோடியின் உத்தரவாதம்

மோடியின் உத்தரவாதம் என்பது பல ஆண்டுகாலத்திற்கு தொடரும்

இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்ஜிஆரை நினைத்து பார்க்கிறேன்

எம்ஜிஆர் குடும்பத்துக்காக பணியாற்றிவர் அல்ல, மக்களின் நலனிற்காக பணியாற்றியவர்

ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி வழங்கியதால் மக்களின் மனதில் இப்போதும் நிலைத்திருப்பவர் எம்ஜிஆர்

எம்ஜிஆரை போலவே ஜெயலலிதாவும் மக்களின் மனதில் நிலைப்பெற்றிருப்பவர்

தமிழகத்தில் திமுகவால் அரசியலுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது

மோடி அளித்த உத்தரவாதத்தால் தமிழக மகளிருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டது

தமிழகத்தில் 40 லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கிராமப் புறங்களில் 6 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்து இருக்கிறோம்

எம்ஜிஆரை அவமதிப்பது போல் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது

ஜெயலலிதாவிற்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்

தமிழக மக்களோடு ஜெயலலிதா எத்தகைய தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும்

நாடு வளர்வதை போல் தமிழகம் வளரும் என்பது மோடியின் உத்தரவாதம்

காங். - திமுக கூட்டணி தமிழகத்திம் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை

நாடு வளர்ச்சியடையும் போது அதே வேகத்தில் தமிழ்நாடும் வளரும்

2 பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையங்களில் ஒன்று தமிழ்நாட்டிற்கு வர உள்ளது

இண்டியா கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கான பணிகள் எதையும் செய்ய மாட்டார்கள்

முத்ரா கடன் திட்டம் மூலம் தமிழ்நாட்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது

இண்டியா கூட்டணி தமிழகத்தில் வெற்றிப்பெற்றால் மாநிலத்தை வளர அனுமதிக்கமாட்டார்கள்

தமிழகத்தில் 20,000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஜவுளி பூங்காவால் 2 லட்சம் கோடி ரூபாய் வருமானம்

இண்டியா கூட்டணியின் ஒரே நோக்கம் மோடியை வெறுப்பது தான்

எனது 3வது ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கோடு பாஜக பணியாற்றுகிறது

புதிய பாரதத்தை உருவாக்க முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்

தமிழகத்தை ஆளும் கட்சி தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை கெடுக்கிறது

என் மீது அவதூறு பரப்பி பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்

தமிழகத்தை கொள்ளையடிக்க இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர்

இண்டியா கூட்டணி தமிழகத்தை கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும்

குடும்ப ஆட்சியை எப்படி நடத்துவது என்பது பற்றியே சிந்திக்கிறார்கள்

2024ல் ஊழல் கட்சியின் ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர்

இன்டியா கூட்டணியில் இருப்பவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டனர்

இண்டியா கூட்டணி மத்திய அளவில் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது

இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் தேசத்தை இனிமேலும் சுரண்ட முடியாது

தமிழகத்தில் கொள்ளையடிக்க ஆளுங்கட்சி போட்ட திட்டத்துக்கு யாத்திரை மூலம் மக்கள் பூட்டு போட்டுவிட்டனர்

ஊழலை தமிழக மக்கள் எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள்

வந்தே மாதரம் எனக்கூறி உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments