உத்தரப்பிரதேசம், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசத்தில் 15 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு

0 267

உத்தரப்பிரதேசம், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசத்தில் 15 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

56 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 41 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் பாஜக 8 பேரையும், சமாஜ்வாதி கட்சி 3 பேரையும் நிறுத்தியுள்ளன.

மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி, சமாஜ்வாதி எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விடுத்திருந்த அழைப்பை, கொறடா உள்ளிட்ட 8 எம்எல்ஏ-க்கள் புறக்கணித்தனர்.

அதனால் அவர்கள் இன்று கட்சி மாறி வாக்களிக்கலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments