அமெரிக்க வாழ் சென்னை பொறியாளருக்கு கல்வியாளருக்கான உயரிய விருது

0 314

பனிமூட்டம், மேகக்கூட்டங்களால் ஏற்படும் இடர்களை கடந்து படங்களை துல்லியமாக காட்டும்  தொழில்நுட்பத்தை வடிவமைத்த அமெரிக்க வாழ் சென்னை பொறியாளர் அசோக் வீரராகவனுக்கு, டெக்சாஸ் மாநிலத்தில் கல்வியாளர்களுக்கான உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.   

மெட்ராஸ் ஐஐடி-யில் படித்து, ரைஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவரும் அசோக் வீரராகவன், கண்ணுக்கு புலப்படாத பொருட்களையும் துல்லியமாக காட்டும் மேம்படுத்தப்பட்ட இமேஜிங் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளார்.

இதன்மூலம், பனிமூட்டமான சாலையில் வாகனங்களையும்,  மனித தோளை தாண்டி செல்களையும், ரத்த நாளங்களையும் துல்லியமாக படம் பிடிக்க முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தானியங்கி வாகனங்கள், மருத்துவத்துறை எனப் பலவற்றில் பயன்படக்கூடிய இமேஜிங் தொழில்நுட்பத்தை வடிவமைத்த அவருக்கு, எடித் அண்ட் பீட்டர் ஒ டோனல் என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments