லாரி மீது கார் மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பலி

0 438

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை சீமாவரம் பகுதியில் முன்னால் சென்ற  டிப்பர் லாரியின் பின்னால் கார்  மோதிய விபத்தில் பொன்னேரி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ரவிக்குமார் உயிரிழந்தார்.

கடந்த 1991-96 ஆம் ஆண்டுகளில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் அதிமுகவின் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார்.

செங்கல்பட்டில் செட்டிநாடு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று வரும் அவரது மகள் ரவீனா வார விடுமுறைக்காக ஊருக்கு வந்த நிலையில் அவரை மீண்டும் இன்று காலை கல்லூரியில் விட்டு விட்டு தமது காரில் மனைவி நிர்மலாவுடன் திரும்பி வரும் போது சீமாவரம் அருகே முன்னால் சென்ற  டிப்பர் லாரியின் பின்னால் கார் மோதியது.

இந்த விபத்தில்  பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மீஞ்சூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் வரும் வழியிலே ரவிக்குமார் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்த அவரது மனைவி நிர்மலாவுக்கு சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கார் ஓட்டுநர் இன்று விடுப்பு எடுத்து கொண்டதால் ரவிகுமாரே காரை ஓட்டி சென்ற போது விபத்து ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments