அரபு எழுத்து பொறித்திருந்த ஆடையணிந்த பெண்ணுக்கு எதிர்ப்பு
பாகிஸ்தானில் அரபு எழுத்துக்கள் பொறித்திருந்த ஆடை அணிந்திருந்த பெண்ணை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி வெளியாகி உள்ளது.
கணவருடன் உணவகத்திற்கு சென்றிருந்த அந்த பெண் அணிந்திருந்தது குர்ஆன் வசனங்கள் என்று கருதிய சிலர், ஆடையை கழட்டும்படி முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து பெண் காவலர் ஒருவர், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அந்தப் பெண்ணை மீட்டு அனுப்பி வைத்தார்.
Comments