சவுதி பாலைவனத்தில் கரமுரடான மலைப்பகுதியில் மாரத்தான் போட்டி

0 465

சவுதி அரேபியா நாட்டு பாலைவனத்தில் கரமுரடான மலைப்பகுதியில் நடத்தப்பட்ட மாரத்தானில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

கண்ணுக்கு எட்டும் தூரம் வரை வனாந்திரமாக இருந்த பகுதியில் காணப்பட்ட மேகக் கூட்டம் இயற்கையின் எழிலை பறைசாற்றியது

பாலைவனத்தின் நடுவில் 10 கிலோமீட்டர் பாதையில் குதித்தல், ஏறுதல், ஊர்ந்து செல்வது என பல்வேறு சவால்களை சந்தித்த மாரத்தான் வீரர், வீராங்கனைகளில் ஒரு சிலரே பயண தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் எட்டினர்.

ஆடவருக்கான பிரிவில் பிரிட்டன் தடகள வீரர் ஜோன் அல்பனும், மகளிருக்கான பிரிவில் ரஷ்ய வீராங்கனை அலிசா பெட்ரோவாவும் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments