இந்திய கடலோர காவல்படையின்தினத்தை முன்னிட்டு சாசகங்கள்
சென்னை துறைமுகம் கடற்பகுதியில் இந்திய கடலோர காவல் படை நிறுவன தினத்தை முன்னிட்டு கடலோர காவல்படையின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நடுக்கடலில் கப்பல் அல்லது படகு தீப்பிடித்தால் எப்படி தீயை அணைப்பது, அதிலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்பது, மீட்பு பணியின் போது அவசரகால தேவைக்கு உணவளிப்பது, மீனவர் படகு சேதமடைந்து செயலிழக்கும் நிலையில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுமக்களும் கடற்படை கப்பலில் பார்வையாளர்களாக கடலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
Comments