பராமரிப்பு, வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு
சென்னையில் கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணி, தொல்காப்பியர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணி உள்ளிட்டவற்றை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
மெரினாவில் பராமரிப்பு பணிக்காக வழங்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர் கழிவறையை முறையே பராமரிக்காததையும், சீரமைக்காததையும் அவர் கண்டித்தார்.
வெள்ளத்தடுப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற IAS அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவின் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க அலுவல் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் கூறினார்.
Comments