ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.17 ஆயிரம் வட்டி என்று ஆசைகாட்டி மோசடி

0 768

சென்னை ஈக்காடுதாங்கலில் அன்னை கேப்பிட்டல்ஸ் என்ற பெயரில் அலுவலகம் அமைத்து, கிரிப்டோ கரன்சியில் 1லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 17 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி 300 நபர்களிடம் 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக நான்கு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் , `அன்னை கேப்பிட்டல் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்க உங்க வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது ’என்ற வாசகத்தோடு பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பல பெயர்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து முதலீடு திரட்டி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மோசடிப் பணத்தில் வாங்கிய 3 கோடி மதிப்பிலான சொத்துகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு இயக்குநரான ரஞ்சித் பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments