முழு நிலவு தினத்தில் சாலையில் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
சீனாவில் புத்தாண்டு பிறந்த பிறகு 15 நாளில் வரும் முழு நிலவு தினத்தில் நடத்தப்படும் விளக்குத் திருவிழாவுக்காக தலைநகர் பீஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மேம்பாலங்கள், கட்டிடங்கள் பல வண்ணங்களில் மிளிரும் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
சீனாவின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், டிரம்ஸ் முழங்க வீதிகளில் நடனக் குழுவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
பறக்கும் பாம்பு, பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்டுள்ள விளக்கு அலங்காரங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன. சீனாவில் டிராகன் வருடம் தொடங்கியதை குறிப்பிடும் வகையில் வானில் பறக்கும் பாம்பு வடிவிலான பட்டங்களை பறக்கவிட்டனர்.
மேலும் லேசர் மூலமும் வானில் வர்ண ஜாலம் நிகழ்த்திக் காட்டப்பட்டது
Comments