நாட்டின் மிக நீளமான சுதர்ஷன் சேது கேபிள் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
குஜராத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுதர்ஷன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். 980 கோடி ரூபாய் செலவில் ஓகா - பேட் துவாரகா தீவுக்கு இடையே இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய அந்த நான்கு வழிச்சாலை பாலம், 27 புள்ளி 20 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ள சுதர்சன் சேது பாலத்தின் இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. நடைபாதையின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பேட் துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
Comments