பாஜக-வில் சேர்ந்த விஜயதரணி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

0 773

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

பாஜகவில் இணைந்த விஜயதாரணி மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வபெருந்தகை கடிதம் எழுதி இருந்தார்.

விஜயதரணி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து விளவங்காடு சட்டமன்றத் தொகுதி காலியானதாக விரைவில் அறிவிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments