ஜூலை 1 முதல் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் நடைமுறைக்கு வரும் - உள்துறை அமைச்சர் அமித் ஷா
ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக, பாரதிய நியாய் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநியம் ஆகிய புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த மூன்று சட்டங்களில் குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஜூலை முதல் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments