குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து மூழ்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

0 393

உத்தர பிரதேசத்தில் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து மூழ்கியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

பவுர்ணமியையொட்டி கங்கை நதியில் நீராடுவதற்காக எட்டா மாவட்டம் ஜெய்தாரா கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர்  சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மீது மோதாமல் தவிர்க்க டிராக்டரை ஓட்டுநர் திருப்பியபோது விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. 

22 பேர் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments